Chapter 3.4 | Aster Classes

Tamilnadu, Samacheer, Kalvi, 10th, Tamil, Solutions, Chapter 3.4, கோபல்லபுரத்து மக்கள்,

Question 1.
பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு பேசுக.


Answer:
பசித்தவருக்கு உணவிடுதல் என்பது ஒரு மனிதநேயச் செயலாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற புகழ்மொழிக்கேற்ப பசியால் வருந்தும் ஒருவருக்கு அந்நேரத்தில் உணவளிப்பது அவருக்குப் புத்துயிர் அளிப்பதாக இருக்கிறது.

விருந்தினருக்கு உணவிடுதல் என்பது நாச்சுவைக்காகவும் விருந்தோம்பல் காரணமாகவும் உணவிடப்படுகிறது. தமிழர் பண்பாடுகளில் சிறந்த ஒன்று விருந்தோம்பல். ஆகவே, விருந்தளிப்பதனைப் பெறும் பேறாகக் கருதி உணவளிப்பர்.

Question 2.
உங்கள் கற்பனையை இணைத்து நிகழ்வைக் கதையாக்குக.


Answer:
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு, இரண்டு பேருமே முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும் போது, விருந்தினர் வருகை அவர்களை அன்பான கணவன் மனைவியாக மாற்றிவிடும் அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்ப்படிதலும் ஆச்சரியமாக இருக்கும். விருந்தாளிகள் அடிக்கடி வரமாட்டார்களா என்று இருக்கும்.

3. விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா?
காலையிலிருந்தே வீட்டிற்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா கேட்பார். “என்ன விஷயம், இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போராங்களா என்ன?”

“ஏங்க…. காலையிலேருந்து வேப்ப மரத்துல காக்கா விடாம கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாளி வரப்போறாங்க பாருங்க.” “அடடே, ஆமாம் காக்கா கத்துது யாரு வரப்போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே…. உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிட்டு” – நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம். அப்பா சொன்னது சரி, காக்கா கத்தியதும் சரி. தூரத்தில் தெருமுனையில் அறந்தாங்கி மாமாதலையில் பலாப்பழத்துடன்வந்து கொண்டிருந்தார். அம்மாவுக்குக் காக்கை மொழி தெரியும். – தஞ்சாவூர்க் கவிராயர்


Answer:

விருந்தினர் தினம்

அதிகாலையில் கதிரவன் பொன் நிறமான ஒளிக்கதிர்களை வீசிக் கொண்டிருந்தான். விடியலை உணர்ந்த பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. குடும்பத் தலைவிகள் சாணநீர் கரைசலுள்ள வாளி, துடைப்பம், கோலப்பொடி கிண்ணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறி வீட்டின் முன்றிலில் சாணநீர் தெளித்து துடைப்பத்தால் பெருக்கி கோலமிட்டனர். பின் வீட்டிற்குள் சென்று மற்ற வேலைகளில் ஈடுப்பட்டனர்.

ஒருவரது இல்லத்தில் மட்டும் வேப்ப மரத்திலிருந்து காக்கை ஒன்று கரைந்து கொண்டிருந்தது. காக்கை அதிகாலையில் கரைந்தால் விருந்தினர் வருகை இருக்கும் என்பது ஐதீகம். ஆகவே அப்பெண்மணி விருந்துக்கான உணவினைத் தயார் செய்ய ஆரம்பித்தாள். இடையில் தன் கணவனுடன் மனவருத்தம் ஏற்பட்டு சண்டை வேறு குழந்தைகளின் மனதில் விருந்தினர் வந்தால் பெற்றோர் சண்டையை விட்டு விட்டு மகிழ்வர் எனக் கருதிக் கொண்டிருந்த போது பலாப்பழம் ஒன்றைத் தன் தலையில் வைத்து சுமந்தபடி வந்தார். பெற்றோர் சண்டையை விட்டுவிட்டு விருந்தினரை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் மூழ்கினர். குழந்தைகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

Answer:
முன்னுரை :
கோபல்லபுரத்து மக்கள் என்ற கதை சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை இக்கதையில் காண்போம்.

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :
சுப்பையாவுடன் புஞ்சையில் அன்று அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா வேலைக்கு ஒரு ஆளை அழைத்து வந்தார். அன்னமய்யாவுடன் வந்தது சன்யாசியோ, பரதேசியோ இல்லை. கிட்டே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு வாலிபன். வாலிபனது தாடியும், அழுக்கு ஆடையும், தள்ளாட்டமும் அவனை வயோதிபனைப் போலவும் சாமியாரைப் போலவும் காட்டியது.

நீச்சுத் தண்ணீ ர் :
அன்னமய்யாவைப் பார்த்த அவ்வாலிபன், குடிக்கத் தண்ணி கிடைக்குமா? எனக் கேட்டான். அதற்கு அன்னமய்யா நீச்சுத் தண்ணீ தரவா? எனக் கேட்டான். கரிசல் மண்ணில் பாதி புதைக்கப்பட்டு இருந்த கரிய மண் பாத்திரத்தின் வாய் கற்களால் மூடப்பட்டிருந்தது. அன்னமய்யா மண்பாத்திரத்தின் மேலிருந்த கல்லை அகற்றினான்.

ஜீவ ஊற்று :
அன்னமய்யா கலசத்திலிருந்து கஞ்சின் நீத்துப்பாகத்தைச் சிரட்டையில் ஊற்றிக் கொடுத்தான். நீத்துப் பாகமாகிய மேல் கஞ்சை வாலிபன் குடித்ததும் கலயத்தை அலசி தெளிவு மறைந்த சோற்றின் மகுளி கஞ்சையும் வாலிபனுக்கு ஊற்றிக் கொடுத்தான் அன்னமய்யா.வாலிபனுக்குள் ஜீவ ஊற்று பொங்கியது. அவன் உற்சாகம் அடைந்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு :
கஞ்சியைக் குடித்த வாலிபன் வேப்ப மர நிழலைச் சொர்க்கமாய் நினைத்துத் தூங்கினான். இதைக்கண்ட அன்னமய்யாவுக்கும் மனநிறைவு ஏற்பட்டது. மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்து அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் போலவே அவ்வாலிபனையும் பார்த்தான்.

பெயர் பொருத்தம் :
தூக்கம் தெளிந்து எழுந்த வாலிபன் “உன் பெயர் என்ன?” என்று அன்னமய்யாவிடம் கேட்டான். அதற்கு அவன் அன்னமய்யா என்றான். எவ்வளவு பொருத்தம். ‘எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான்’ என் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது என்று மனதுக்குள் கூறினான் அவ்வாலிபன்.

பரமேஸ்வரன் (மணி) :
அன்னமய்யா அந்த வாலிபனின் பெயரைக் கேட்டார். அவன் தன் பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். கம்மஞ்சோறும் துவையலும் கொடுத்தார்கள். பசியால் அதையும் உண்டு உறங்கினான்.

முடிவுரை :
அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்த அன்னமய்யாவின் பெயர் அவனுக்கே பொருத்தமுடையதாக அமைகிறது. கம்மஞ்சோறும், துவையலும் கரிசல் மண்ணுடன் மணக்கின்றது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கதை ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) கோபல்லபுரத்துக் கோகிலா
இ) கோபல்லபுரத்து மக்கள்
ஈ) கோபல்ல சுப்பையா
Answer:
இ) கோபல்லபுரத்து மக்கள்

Question 2.
கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர்……………………
அ) கி. ராஜநாராயணன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
அ) கி. ராஜநாராயணன்

Question 3.
உறையூர் உள்ள மாவட்டம் ……………………
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) கரூர்
ஈ) பெரம்பலூர்
Answer:
அ) திருச்சி

Question 4.
கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) கலித்தொகை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) அகநானூறு

Question 5.
கி. ராஜநாராயணின் சொந்த ஊர் ……………………
அ) கோபல்லபுரம்
ஆ) இடைசெவல்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
Answer:
ஆ) இடைசெவல்

Question 6.
இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்டுள்ள நூல் கால்……………………
அ) கோபல்லபுரத்து மக்கள்
ஆ) பால்மரக்காட்டினிலே
இ) சட்டை
ஈ) சித்தன் போக்கு
Answer:
அ) கோபல்லபுரத்து மக்கள்

Question 7.
எப்போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல்?
அ) விடுதலைப்
ஆ) விவசாயிகளின்
இ) நெசவாளர்களின்
ஈ) தொழிலாளர்களின்
Answer:
அ) விடுதலைப்

Question 8.
கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்ற ஆண்டு ……………………
அ) 1988
ஆ) 1991
இ) 1994
ஈ) 1996
Answer:
ஆ) 1991

Question 9.
எழுத்துலகில் கி.ரா. என்றழைக்கப்படுபவர்……………………
அ) கி. ராஜமாணிக்கம்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) கி. ராசரத்தினம்
ஈ) கி. ராசதுரை
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

Question 10.
கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர்……………………
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) முத்துலிங்கம் ஈ) அகிலன்
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

Question 11.
வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகள் எவ்விலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன?
அ) நாஞ்சில்
ஆ) கொங்கு
இ) கரிசல்
ஈ) நெய்தல்
Answer:
இ) கரிசல்

Question 12.
வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளைத் தொடங்கியவர் ……………………
அ) அகிலன்
ஆ) இந்திரா பார்த்தசாரதி
இ) நாஞ்சில்நாடன்
ஈ) கி.ராஜநாராயணன்
Answer:
ஈ) கி.ராஜநாராயணன்

Question 13.
கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்……………………
அ) கரிசல் இலக்கியம்
ஆ) நாஞ்சில் இலக்கியம்
இ) புதுக்கவிதை
Answer:
அ) கரிசல் இலக்கியம்

Question 14.
கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி ……………………
அ) கு. அழகிரிசாமி
ஆ) பூமணி
இ) பா. செயப்பிரகாசம்
ஈ) சோ. தர்மன்
Answer:
அ) கு. அழகிரிசாமி

Question 15.
கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவரைக் கண்டறி.
அ) பூமணி
ஆ) வீரவேலுசாமி
இ) வேலராம மூர்த்தி
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந. பிச்சமூர்த்தி

Question 16.
வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) பாச்சல் – 1. சோற்றுக்கஞ்சி
ii) பதனம் – 2. மேல்கஞ்சி
iii) நீத்துப்பாகம் – 3. கவனமாக
iv) மகுளி – 4. பாத்தி
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Question 17.
வட்டார வழக்குச் சொற்களைப் பொருத்திக் காட்டுக.
i) வரத்துக்காரன் – 1. புதியவன்
ii) சடைத்து புளித்து – 2. சலிப்பு
iii) அலுக்கம் – 3. அழுத்தம்
iv) தொலவட்டையில் – 4. தொலைவில்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 1, 4, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
ஆ) 1, 2, 3, 4

Question 18.
காய்ந்தும் கெடுக்கிற பெய்தும் கெடுக்கிற மழையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இலக்கியங்கள் ……………………
அ) கரிசல் இலக்கியங்கள்
ஆ) நெய்தல் இலக்கியங்கள்
இ) கொங்கு இலக்கியங்கள்
ஈ) புதினங்கள்
Answer:
அ) கரிசல் இலக்கியங்கள்


VISITORS COUNT

159899
Users Today : 603
Total Users : 159898
Views Today : 1559
Total views : 598287

Browse Categories

Archives